கேரளா ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் முடிவு : ரூ. 25 கோடியை தட்டி தூக்கிய தமிழர்!

கேரளா ஓணம் பம்பர் லாட்டரியில் கோவை சேர்ந்தவருக்கு ரூ. 25 கோடி பரிசு கிடைத்துள்ளது. கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி சீட்டு நடத்தி வருக்கிறது. ஒவ்வொரு பண்டிகைக் காலங்களிலும் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெறும்.…

கேரளா ஓணம் பம்பர் லாட்டரியில் கோவை சேர்ந்தவருக்கு ரூ. 25 கோடி பரிசு கிடைத்துள்ளது.

கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி சீட்டு நடத்தி வருக்கிறது. ஒவ்வொரு பண்டிகைக் காலங்களிலும் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெறும். . புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளுக்கு லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரூ.1 கோடி, ரூ.10 கோடி, ரூ.25 கோடி என பம்பர் பரிசுகள் அறிவிக்கப்படுவதால், லாட்டரி வாங்குபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கேரளாவில் கடந்த மாதம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கேரள மாநில அரசு திருவோணம் பம்பர் லாட்டரி முதல் பரிசாக 25 கோடி ரூபாய் அறிவித்தது. இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.1 கோடி ரூபாயும் மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.50 லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு கேரளாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் 25 கோடி ரூபாய் ஓணம் பம்பர் பரிசை பெற்றார். ஓணம் பம்பர் லாட்டரிச் சீட்டுக்கான ஒரு டிக்கெட் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த ஆண்டுக்கான ஓணம் பம்பர் பரிசு தொகைக்கான குலுக்கல் முடிவுகள் நேற்று மதியம் வெளியானது. திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் பிற்பகல் 2 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி முதல் பரிசு TE 230662 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்க்கு கிடைத்தது.

கோவை அன்னூரை சேர்ந்த நடராஜன் என்பவர் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வயலாரில் உள்ள லாட்டரி கடையில் 10 டிக்கெட்டுகளை வாங்கியதாக கூறப்படுகிறது. 10 டிக்கெட்டுகளில் ஒன்று முதல் பரிசான ரூ.25 கோடியை வென்றது. அவருக்கு வரி பிடித்தம் போக சுமார் ரூ.12.88 கோடி  கிடைக்கும் என கூறப்படுகிறது.

அதே கடையில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு தான் முதல் பரிசு கிடைத்துள்ளது உறுதி செய்யப்பட்டது. வெற்றி பெற்றிருக்கும் இந்த லாட்டரி டிக்கெட் கோழிக்கோட்டைச் சேர்ந்த எஸ். ஷீபா என்ற லாட்டரி ஏஜென்ட் மூலம் பாலக்காட்டில் வாங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏஜெண்ட் ஷீபாவுக்கும் கமிஷன் தொகை கிடைக்கும். குலுக்கல் முடிந்த 30 நாட்களுக்குள் லாட்டரி பரிசு வென்றவர்கள், லாட்டரி டிக்கெட் மற்றும் அறிவுறுத்தப்பட்ட அனைத்து ஆவணங்களுடன், பரிசு தொகையை பெறுவதற்கான நெறிமுறைகளை பின்பற்றி தங்களின் பரிசு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.