‘லால் சலாமில்’ 2 நிமிட காட்சிகள் நீக்கம்! ஏன் தெரியுமா?

‘லால் சலாம்’ திரைப்படத்தில் 2.32 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக தணிக்கைக் குழு அறிவித்துள்ளது.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  கடந்த 2012-ம் ஆண்டு நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக…

‘லால் சலாம்’ திரைப்படத்தில் 2.32 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக தணிக்கைக் குழு அறிவித்துள்ளது. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  கடந்த 2012-ம் ஆண்டு நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த  ”வை ராஜா வை” என்ற படத்தையும்  இயக்கினார்.

இந்த நிலையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம்.  விஷ்ணு விஷால்,  விக்ராந்த் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.  இத்திரைப்படத்தில்  நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில்,  முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் நடித்துள்ளார்.  படம் பிப்.9ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில்,  படத்தில் வரும் சில மதரீதியான வசனங்களை தணிக்கை குழு நீக்கம் செய்துள்ளது.  படத்தில் மொத்தம் 2 நிமிடங்கள் 32 வினாடிகள் காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.