“நான் ஏற்கெனவே அதற்கு அடிமையாகிவிட்டேன்” – வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் பதிவு!

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் மக்கானா பற்றிய ஒரு இடுகையை மறு பதிவு செய்துள்ளார்.  அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.  இந்தியாவில்,  மக்கானா ஒரு பாரம்பரிய…

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் மக்கானா பற்றிய ஒரு இடுகையை மறு பதிவு செய்துள்ளார்.  அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

இந்தியாவில்,  மக்கானா ஒரு பாரம்பரிய ‘சிற்றுண்டி’ உணவாக கருதப்படுகிறது,  சமீபத்தில் இதன் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து பலர் இதனை விரும்பி சாப்பிட்டு வருவதை அடுத்து,  இது மிகவும் பிரபலமாகி வருகிறது.

இந்த நிலையில்,  மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் மக்கானா பற்றிய ஒரு இடுகையை மறு பதிவு செய்துள்ளார்.  அந்த இடுகை FinFloww என்ற எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்டது.  அந்த பதிவில் “சில ஆண்டுகளுக்கு முன்பு,  மக்கானா ஒரு இந்திய சிற்றுண்டியாக இருந்தது.  அதை யாரும் கவனிக்கவில்லை. அது பயனற்றது என்று எல்லோரும் நினைத்தார்கள்.  அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில்,  மக்கானா இப்போது பூமியில் மிகவும் விரும்பப்படும் சிற்றுண்டியாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.  இந்த இடுகை ஒரு நாளுக்கு முன்பு பகிரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,  மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த பதிவை மறு பதிவு செய்துள்ளார்.  அவர் அதில், “நான் ஏற்கெனவே அதற்கு அடிமையாகிவிட்டேன்.  தேநீர் அருந்தும் வேளையில் எப்போதும் என் மேசையில்” என்று பகிர்ந்துள்ளார்.  ஆனந்த் மஹிந்திராவின் பதிவிற்கு மக்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.  அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

https://twitter.com/anandmahindra/status/1779845584498864335?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1779845584498864335%7Ctwgr%5E0776159cc08e5612223dd4ade4c2f86bb4356c78%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fhow-indian-makhana-became-the-worlds-fox-nut-anand-mahindra-reacts-to-post-on-chai-time-snack-101713237109137.html

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.