தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பளர் இளையராஜா. சுமார் 1,523 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா 8600 பாடல்களுக்கு மெட்டமைத்துள்ளார். மேலும் 380-க்கும் மேற்பட்ட பாடல்களை தன் சொந்த குரலில் பாடியுள்ளார்.
இது மட்டுமின்றி 5 தேசியவிருதுகள், பத்மவிபூஷண் விருது, சங்கீத நாடக அகாடமி விருது, ராஜ்யசபா எம்பி ஆகிய கௌரவங்களையும் பெற்றுள்ளார். இப்படி இளையராஜ படைத்துள்ள ஏராளமான சாதனைகளுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்ட நாள் இன்று.
அன்னக்கிளி 1976

இளையராஜா முதன் முதலில் இசையமைத்த அன்னக்கிளி (Annakili) திரைப்படம் 1976 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் வெளியானது. தேவராஜ்-மோகன் இயக்கியிருந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். கிராமப் பின்னணியுடன் எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.
அன்னக்கிளி (Annakili) திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடந்துள்ளது. இதன் மூலம் தன்னுடையை இசை பயணத்தின் 50 அவது ஆண்டை இளையராஜா நிறைவு செய்கிறார்.







