மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைமை பொறுப்பேற்கும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர்!

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் நியமிக்கப்பட்டுள்ளார்.     ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் பவன் தவுலூரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். …

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  

 

ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் பவன் தவுலூரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே இந்த பொறுப்பில் பனோஸ் பனய் என்பவர் பணியாற்றி வந்தார்.  அவர் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டு அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.

முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் குழுக்களை தனியாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரிகளை தலைமை பதவிகளில் நியமித்து இருந்தது. அதன்படி சர்பேஸ் பிரிவுக்கு பவன் தவுலூரி தலைமை வகித்து வந்தார்.  மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.

பின்னர் மிகைல் பராகின் புதிய பதவிகளில் பணியாற்ற விரும்பியதை தொடர்ந்து, தவுலூரி விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவுகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  தவுலுரி ஐ.ஐ.டி. மெட்ராஸ்-இல் பட்டம் பெற்றவர் ஆவார்.  இதன் மூலம் இவர் உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை பொறுப்பேற்ற இந்தியர்கள் பட்டியலில் பவன் தவுலூரியும் தற்போது இணைந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.