“முழுசா தெரிஞ்சா.. என்னைப்போல் மாப்பிள்ளை வேண்டும் என ஆசைப்பட மாட்டார்கள்” – நடிகர் #Arvindswami!

“உண்மையில் என்னைப் பற்றி தெரிந்தால், யாரும் என்னப்போல் மாப்பிள்ளை வேண்டும் என ஆசைப்படமாட்டார்கள்” என நடிகர் அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு…

“If they knew the whole thing, they wouldn't want a groom like me” - Actor #Arvindswami!

“உண்மையில் என்னைப் பற்றி தெரிந்தால், யாரும் என்னப்போல் மாப்பிள்ளை வேண்டும் என ஆசைப்படமாட்டார்கள்” என நடிகர் அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்திற்கு பின்பு பல முன்னாள் மாணவ, மாணவியர்கள் – ஆசிரியர்கள் சந்திப்புக்கள் நடைபெற்றன.

தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின் பிரேம்குமார், நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் போன்றோர் நடித்துள்ளனர். இது கார்த்தியின் 27வது படமாகும்.

படத்தை 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சமீபத்தில் வெளியாகின. அதில், ‘நான் போகிறேன்’ மற்றும் ‘யாரோ இவன் யாரோ’ எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் அரவிந்த் சாமி பேசியதாவது;

“ரொம்ப அழகான இந்தக் கதையில் நடிக்கவும், அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் பிரேம் குமாருக்கு நன்றிகள். இந்தக் கதையைப் படித்ததும் இது என் வாழ்வில் நடந்த கதை என்று நினைத்தேன். என் வாழ்வில் நடந்த, இன்னும் என்னை பாதித்துக் கொண்டிருக்கும் கதை இது. படம் வெளியானப் பிறகு இதைப் பற்றி நான் விரிவாகப் பேசுகிறேன்.

இந்தப் படத்தில் நான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்தேன். கார்த்தியும் நானும் ரொம்ப நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டோம் என்று நம்புகிறேன். என் அண்ணன் கார்த்தி. அந்த அளவிற்கு நாங்கள் இந்தப் படத்தின் மூலம் பழகியிருக்கிறோம். இந்தப் படம் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும் படமாக இருக்கும்.

திரைப்படங்களில் ஒருவர் ஏற்கும் கதாபாத்திரத்தை வைத்து அவர் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பார் என நினைத்துவிடுகிறார்கள். அப்படிதான் முதலில் நான் செய்த கதாப்பாத்திரங்களை வைத்து என்னைப் போல் மாப்பிள்ளை வேண்டுமென பேசத் தொடங்கினார்கள். ஆனால், உண்மையில் என்னைப் பற்றி தெரிந்தால் யாரும் அப்படி ஆசைப்படமாட்டார்கள் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.