தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால், பழைய முறைப்படி கேளிக்கை வரிவிலக்கு வழங்க வேண்டும் என்று மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் வெள்ளக்கோயில் சுவாமிநாதனிடம் வேண்டுகோள் வைத்திருப்பதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமநாராயணன் தெரிவித்தார்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைவர் என். ராமசாமி என்ற முரளி ராமநாராயாணன் தலைமையில் இன்று நடைபெற்றது. அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முரளி ராமநாராயணன். படப்பிடிப்பை தொடங்கியுள்ள படக்குழுவினர் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசிடம் திரையரங்கு சம்பந்தமாக 10 கோரிக்கைகளை முன்வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் முறையை செயல்படுத்த வேண்டும், ஆன்லைன் கட்டணத்தில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு வழங்க வேண்டும், சிறிய பட்ஜெட் படங்களை வெளியிடும் பொழுது பழைய முறைப்படி முதல் வகுப்பு, 2 ஆம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்ற அடிப்படையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய வேண்டும்’ என்று திரையரங்கு உரிமையாளர்களுக்கு கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைகளை நடைமுறை படுத்திக் கொடுக்க வேண்டும் என்று மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் வெள்ளக்கோயில் சுவாமிநாதனிடம் வேண்டுகோள் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால், பழைய முறைப்படி கேளிக்கை வரிவிலக்கு வழங்க வேண்டும் என்றும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள மானியத்தை விரைவாக வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.