33.3 C
Chennai
May 31, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

அந்த வலி என்னவென்று நன்றாகத் தெரியும்; வைரலாகும் விஜய் ஆண்டனியின் ஷாக்கிங் வீடியோ..!

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட  நிலையில்,  நடிகர் விஜய் ஆண்டனி பேசியுள்ள வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு கொண்டதாகாவும், பின்பு அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல். கடந்த சில நாட்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி பேசிய பழைய விடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில், “எனக்கு 7 வயதாக இருக்கும்போது என் அப்பா தற்கொலை செய்துகொண்டார். கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு என் தாய் பட்ட கஷ்டங்களால் அந்த வலி என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும். நிறைய குழந்தைகளும் தற்கொலை எண்ணத்துடன் இருக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் அழுத்தம் கொடுக்கக் கூடாது. மற்றவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என எதிர்பார்க்காமல் நீங்கள் உங்களை நேசியுங்கள்” எனக் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading