ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு ”விவாதத்திற்கு உரிய அம்சங்களில் தலையிட நான் விரும்பவில்லை” என மோகன் பாபு மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட நடிகர் மோகன் பாபு இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம்
திருப்பதி கோவிலில் ஏழுமலையான் வழிபட்டார். சாமி கும்பிட்டபின் அவருக்கு
தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய மோகன்பாபு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தை புகழ்ந்து பேசினார்.
மேலும் விரைவில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் திரைப்படம் தயாரிக்க
இருப்பதாகவும், அந்த படத்தை பற்றி விவரங்களை அவருடைய மகன் நடிகர் மஞ்ச் விஷ்ணு தெரிவிப்பார் என்றும் குறிப்பிட்டார். உங்கள் நண்பர் ரஜினிகாந்த் என்று செய்தியாளர் கூறியவுடன் ரஜினிகாந்த் பற்றி பேசுவது என்றால் மாலை வரை பேசலாம். விவாதத்திற்கு உரிய அம்சங்களில் இப்போது நான் தலையிட விரும்பவில்லை என்று கூறினார்.
சமீபத்தில் விஜயவாடாவில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர் என்டி
ராமராவின் நூறாவது பிறந்தநாள் கூட்டத்தில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தெலுங்கு
தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசினார்.
மேலும் அவர் தொலைநோக்கு பார்வை உள்ள தலைவர். அவருடைய தொலைநோக்கு பார்வை காரணமாகவே ஹைதராபாத் நகரம் மாநகரமாகா அபிவிருத்தி அடைந்துள்ளது என்று குறிப்பிட்டார். ரஜினிகாந்தின் இந்த கருத்திற்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா உட்பட ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள்
பலர் ரஜினிகாந்தை கண்டித்தனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை இணைத்து கொண்ட நடிகர் மோகன் பாபு ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு அவரை பற்றி பேசுவது என்றால் மாலை வரை பேசலாம்.
விவாதத்திற்கு உரிய அம்சங்களில் தலையிட நான் விரும்பவில்லை என்று கூறி
இருப்பது ரஜினிகாந்திற்க்கு மோகன் பாபு விடுதுள்ள மறைமுக கண்டனம் என்று
கருதப்படுகிறது.







