“நான் உங்களுடைய டை ஹார்டு பேன்” – மம்மூட்டியின் புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்த செல்வராகவன்!

நடிகர் மம்மூட்டியின் புகைப்படம் ஒன்றிற்கு ‘வாவ் மைண்ட் ப்ளோயிங்’ எனவும், உங்களுடைய டை ஹார்டு பேன் எனவும் இயக்குநர் செல்வராகவன் கருத்து தெரிவித்து நெகிழ்ந்துள்ளார். மலையாளத்தில் நடிகர் மம்மூட்டி நடிப்பில் உருவான பிரம்மயுகம் படம்…

நடிகர் மம்மூட்டியின் புகைப்படம் ஒன்றிற்கு ‘வாவ் மைண்ட் ப்ளோயிங்’ எனவும், உங்களுடைய டை ஹார்டு பேன் எனவும் இயக்குநர் செல்வராகவன் கருத்து தெரிவித்து நெகிழ்ந்துள்ளார்.

மலையாளத்தில் நடிகர் மம்மூட்டி நடிப்பில் உருவான பிரம்மயுகம் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ராகுல் சதாசிவன் இயக்கத்தில் 70 வயதிற்கும் மேற்பட்ட வயதான கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை ஆல் நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே தனித்துவமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை எடுத்து மம்மூட்டி நடித்து வருகிறார்.

ஓரினச் சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘காதல் தி கோர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பின் வெளிவந்துள்ள பிரம்மயுகம் திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், மம்மூட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரம்மயுகம் படத்தின் போது எடுக்கப்பட்ட அவருடைய புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதற்கு இயக்குநர் செல்வராகவன், ‘நான் உங்கள் டை ஹார்ட் பேன்’ எனவும் மைண்ட் ப்ளோயிங் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.