“நல்லவர்களுக்காக ஓட்டு கேட்பது எனக்கு பெருமை” -கமல்ஹாசன்!

“நல்லவர்களுக்காக ஓட்டு கேட்பது எனக்கு பெருமை” என மதுரை விமான நிலையத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர்…

“நல்லவர்களுக்காக ஓட்டு கேட்பது எனக்கு பெருமை” என மதுரை விமான நிலையத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், தென் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

அவர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது:

சிறப்பாக பணியாற்றி வரும் காம்ரேட் வெங்கடேசன் அவர்களுக்காக நான் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். நல்லவர்களுக்கு மீண்டும் வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த பிரச்சாரம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.