#HurunIndiaRichList முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி அதானி முதலிடம்!

ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார். ஹுருன் இந்தியா அமைப்பு இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி  ரூ.11.6 லட்சம் கோடி சொத்துக்களுடன்…

ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.

ஹுருன் இந்தியா அமைப்பு இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி  ரூ.11.6 லட்சம் கோடி சொத்துக்களுடன் இந்தியாவில் உள்ள முக்கிய தொழிலதிபராக கருதப்படும் கவுதம் அதானி முதலாவது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் மற்றொரு தொழிலதிபரான முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி  2024 ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை கௌதம் அதானி பிடித்துள்ளார்.

தற்போதை நிலையில் ஆசியாவில் மிகப்பெரும் பொருளாதரத்தை வைத்துள்ள பணக்காரர்களை கொண்ட நாடாக இந்தியா உருவாகி வருகிறது.  சீனா தங்களது நாட்டில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் 25% சரிவைக் கண்டது. அதே நேரத்தில் இந்தியா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் 29% அதிகரித்து, 334 பில்லியனர்களை கொண்டுள்ளது என ஹுருன் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரஹ்மான் ஜுனைத் தெரிவித்துள்ளார்,

ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024ன் படி

  • ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி ரூ.10,14,700 கோடி சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • HCL நிறுவனர் ஷிவ் நாடார்  ரூ.3,14,000 கோடி சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
  • தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனர் சைரஸ் எஸ் பூனவல்லா பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
  • சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் திலீப் ஷங்வி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், ஹிருதிக் ரோஷன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.