கண்ணை பறிக்கும் அழகுடன் இந்தியாவிற்கு வருகிறது பிரம்மாண்ட Motorola 5ஜி போன்.!

மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் ஐரோப்பாவை தொடர்ந்து, இந்த மாத இறுதியில், இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விவோ, ஒன்பினஸ் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அருமையான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது…

மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் ஐரோப்பாவை தொடர்ந்து, இந்த மாத இறுதியில், இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

விவோ, ஒன்பினஸ் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அருமையான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு,, ஸ்டைலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதையே வழக்கமாக கொண்டிருக்கும் மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் மோட்டோரோலா எட்ஜ் 40 எனும் ஸ்டைலிஷான ஸ்மார்ட்போனை ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், மோட்டோரோலா நிறுவனம் தற்போது இதனை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் மே 23ம் தேதி இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 40 போன் அறிமுகம் செய்யப்படுகிறது.

குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தெரிகிறது. இதன் டிஸ்ப்ளேவை பொறுத்தவரை, 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3டி வளைந்த pOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பிரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. இத்துடன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியும் இந்த போனில் உள்ளது.

அதேபோல், இந்த போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் மூலம் இயங்குகிறது. இதுதவிர, 8ஜிபி ரேம் மறறும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. இதன் ஸ்டோரேஜை மேலும் நீட்டிப்பு செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை, டூயல் ரியர் கேமரா செட்டப் பில் வருகிறது. அதாவது, 50 எம்பி பிரைமரி கேமரா, 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி, மற்றும் வீடியோ கால்களுக்கு 32எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 4500 எம்ஏஎச் பேட்டரி, 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போன் எக்லிப்ஸ் பிளாக், லூனார் ப்ளூ மற்றும் நெபுலா க்ரீன் நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் விலை ஐரோப்பிய சந்தையில் EUR 599.99க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில், ரூ.54,000 ஆகும். இந்தியாவிலும் மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் அதே விலை அல்லது ரூ. 50,000க்கு கீழ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விவரங்களும் மே 23 அன்று வெளியிடப்படும் என்பதால் புதிய போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த புதிய அறிவிப்பு குறித்து மோட்டோரோலா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

https://twitter.com/motorolaindia/status/1658015526101086209?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.