இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘ஃபைட்டர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனை தொடர்ந்து, ஹிருத்திக் ரோஷன் ‘ஃபைட்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : கோத்தகிரி குடியிருப்புப் பகுதியில் கருஞ்சிறுத்தை – பொதுமக்கள் பீதி
பதான் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படம் ஜனவரி 25 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. கதாநாயகியாக தீபிகா படுகோனும் முக்கிய கதாபாத்திரத்தில் அனில் கபூரும் நடித்துள்ளனர்.
வியோகாம் ஸ்டுடியோஸ், மார்ஃபிலிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.







