Skip to content
January 10, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » how to link aadhaar with irctc account for tatkal booking
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தட்கல் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி?

தட்கல் முன்பதிவுக்கு ஆதாரை இணைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது.

Author Avatar

Web Editor

June 23, 202511:32 am AadhaaraadharcardIRCTC accountOTPTatkal bookingTraintrainticket

தட்கல் டிக்கெட் முன்பதிவு நடைமுறையை மேம்படுத்தும் நோக்கில், இ-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கி இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 3ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் வெளியிட்ட இந்த மாற்றமானது, உண்மையான பயனர்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை திறம்பட பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, ஐஆர்சிடிசி இணையதள கணக்குகளை வைத்துள்ள பயனாளர்கள் தங்களது ஆதாரை இணைக்க ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம், ஒவ்வொரு பயனருக்கும் மின்னஞ்சல் மூலம் குறுந்செய்தி அனுப்பி உள்ளது.

அதன்படி, ஐஆர்சிடிசி இணையதள கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் தங்களது யூசர் ஐ.டி. (பயனாளர் கணக்கு) மற்றும் பாஸ்வேர்டு மூலம் ஐஆர்சிடிசி முன்பதிவு இணையதளத்துக்குள் சென்று ‘மை அக்கவுன்ட்’ என்ற தலைப்பின் கீழ் இருக்கும் ‘ஆத்தென்டிகேட் யூசர்’ (பயனாளரை அங்கீகரிக்கவும்) என்பதை தேர்வு செய்து ஆதார் அட்டையில் இருப்பது போன்று பெயரை பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த பின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். அந்த ஓடிபியை பதிவு செய்ததும் ஐஆர்சிடிசி இணையதளத்துடன் ஆதார் இணைக்கப்படும். ஆதார் அட்டையில் இருக்கும் பெயரும், இணையதளத்தில் பதிவு செய்யும் பெயரும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே ஆதார் இணைக்கப்படுகிறது. கடைசி நேர சிக்கலை தவிர்க்க பயனாளர்கள் தங்களது இணையதள கணக்குடன் ஆதாரை முன்கூட்டியே இணைக்க ஐஆர்சிடிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

”தமிழ் நாட்டு மக்களை ஏளனமாகப் பார்க்கும் திமுக”- அண்ணாமலை…!

By Web Editor January 10, 2026

மக்களே உஷார்.. 12 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை!

By Web Editor January 10, 2026

“தோட்டா தெரிக்க தெரிக்க”.. விரைவில் ரீ-ரிலிஸாகிறது விஜயின் ‘தெறி’!

By Web Editor January 10, 2026

“ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும்” – அன்புமணி!

By Web Editor January 10, 2026
#ट्रेंडिंग हैशटैग:AadhaaraadharcardIRCTC accountOTPTatkal bookingTraintrainticket

Post navigation

Previous Previous post: மதியம் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
Next Next post: “சட்டப்படி மணல் குவாரிகள் விரைவில் திறக்கப்படும்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading