துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார் 2013ஆம் ஆண்டு இளைஞர்களுக்காக அவரின் முகநூலில் எழுதியிருந்த ஒரு பழைய பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, அங்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார்.
அதே போல சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட டிஐஜி விஜயகுமாரின் மறைவிற்கு காவல்துறையைச் சேர்ந்தவர்களும், அரசு அதிகாரிகளும், பல்வேறு கட்சித்தலைவர்களும் இறங்கள் தெரிவித்து வருகின்றனர்.
விஜயகுமார் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட தொடர்ந்து, டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல் தேனியில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து உறவினர்கள், பொதுமக்களின் அஞ்சலியைத் தொடர்ந்து டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல் தகனம் செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க விஜயகுமார் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இறுதி மரியாதை நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பங்கேற்றார். இதையடுத்து பழைய பள்ளிவாசல் தெரு பகுதியில் உள்ள மயானத்தில் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இவர் 2013ஆம் ஆண்டு இளைஞர்களுக்காக அவரின் முகநூலில் எழுதியிருந்த ஒரு பழைய பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவரின் முகநூலில் எழுதியிருந்த பழைய பதிவு:










