இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள சத்ரண்ட் பகுதியருகே மஸ்ரூண்ட்-ஹாமல் சாலையில் இன்று அதிகாலை நவீன சொகுசு வாகனம் ஒன்று வந்துள்ளது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்த நிலையில் பலத்த காயமடைந்த மற்றொருவர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்.
எனினும், விபத்துக்கான உண்மையான காரணம் பற்றி இன்னும் தெரிய வரவில்லை. இதனிடையே உயிரிழந்தவர்களுக்கு முதல்மந்திரி சுக்வீந்தர் சிங்சு இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி மாவட்ட நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டு உள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




