ஏவிஎம் ஸ்டுடியோவில் ஹெரிடேஜ் மியூசியம்; திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெரிடேஜ் மியூசியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏவிஎம் ஸ்டூடியோஸ் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என 300க்கும்…

சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெரிடேஜ் மியூசியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏவிஎம் ஸ்டூடியோஸ் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது. சமீபகாலமாக திரைப்படத் தயாரிப்பிலிருந்து இந்த நிறுவனம் விலகியுள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி திருமண மண்டபமாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ள நிலையில், 3வது அரங்கில் ஆரம்பகால சினிமாவில் பயன்படுத்தப்பட்ட அரிய பொருட்களை கொண்ட ஹெரிடேஜ் அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் ஏ.வி.எம்.சரவணன், அவரது மகன் குகன், நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வசனத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த பராசக்தி’ திரைப்படம் குறித்த நினைவுத்தூண் மற்றும் ஏவி மெய்யப்பன் சிலை அருகே நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.