ஓமலுார் சுற்று வட்டார பகுதியில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் வீடுகள் கட்டும் சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமான பொருட்களான ஹாலோ பிரிக்ஸ் கல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம், ஓமலுார் காடையாம்பட்டி ஆகிய தாலுகாகளில் அதிக அளவில் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளதால் பெரும்பான்மையாக விவசாய கூலி பணியாளர்கள் வசித்து வருகின்றனர். தற்போது சிறு சிறு வீடுகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது. எனவே வீடுகள் கட்டுவதற்கு செங்கல், ஹாலோ பிரிக்ஸ் உள்ளிட்டவை தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
மேலும் ஹாலோ பிரிக்ஸ் தயாரிக்க தேவையான மூலப் பொருட்களான ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்து உள்ளதால் கற்களின் விலையும் உயர்ந்து உள்ளது. ரூ.21-க்கு விற்னை செய்யப்பட்டு வந்த ஹாலோ பிரிக்ஸ் தற்போது ரூ.23 -க்கு விற்பனையாகி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
–அனகா காளமேகன்