முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் இன்றும் தொடரும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் கனமழையால் பொதுமக் களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழு வதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென் கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 12- ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும், பெரும் பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் கன மழை தொடரும் நிலையில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. வடிகால் சீரமைக்கப் படாததாலும், அதிகளவில் தொடர்ச்சியாக மழை பொழிவதாலும் நகர் முழுவதும் வெள்ள நீர் தேங்கிக் காட்சியளிக்கிறது. பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீர் வெளியேற்றப்படாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருமணத்திற்கு பிறகான கட்டாய உறவு தொடர்பான வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்

EZHILARASAN D

சென்னையில் உள்ள பிஎப்ஐ தலைமை அலுவலகத்திற்கு சீல்

G SaravanaKumar

மாணவி கூட்டுப் பலாத்காரம்: ’மலை அடிவாரத்துக்கு காதலரோடு போனது ஏன்?’அமைச்சர் பேச்சால் சர்ச்சை

Gayathri Venkatesan