நள்ளிரவு முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் திண்டுக்கல், கோவை மற்றும் மதுரை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பொழிவு பதிவானது. இதன் காரணமாக மதுரையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சங்கீதா. இதே போல திண்டுக்கல் மற்றும் கோவை மாவட்டத்திலும் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







