தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு என இந்த நேரத்தின் முக்கிய செய்திகளை ஒரு வரியில் தெரிந்துகொள்வோம்.
- புதிதாக 11 மின் பகிர்மான கோட்டங்கள் பயன்பாட்டிற்கு திறப்பு… காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொங்கலுக்குள் திறப்பதில் சிக்கல்… புயல், மழையால் கட்டுமான பணிகளில் தாமதம் என அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…
- தமிழ்நாட்டில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை தேவை… எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல
- பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3,000 வழங்க வேண்டும்… முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
- அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மீண்டும் விசாரணை… ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..
- சென்னை சூளைமேட்டில் மின்கசிவால் ஏசி வெடித்து தீ விபத்து… வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்…
- ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.10 லட்சத்தை இழந்த எஞ்சினீயர்; உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்
- காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள்…. மின் ஊழியர்கள் ஜனவரி 10-ந் தேதி வேலைநிறுத்தம் அறிவிப்பு….
- சென்னையில் ஆபரண தங்கம் விலையில் சரிவு… சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, கிராம் 5 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை….
- சதுரகிரி கோயிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்… கார்த்திகை மாத கடைசி நாள் என்பதால் வனத்துறை சிறப்பு அனுமதி…
- குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய சிறப்பு வரிசை…சபரிமலை தேவசம் போர்டு முடிவு…
- சாலையை கடக்க முயன்ற 5ம் வகுப்பு மாணவி சரக்கு வாகனம் மோதி பலி…. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி….
- ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறப்பு… வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச்செயலாளரும் கூட்டாக திறந்து வைத்தனர்.
- பெரு நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் 7 பேர் பலி….. நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கு அவசர நிலை பிரகடனம்….
- இங்கிலாந்தில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரிப்பு… 8-வது முறையாக வட்டி விகிதம் உயர்வு…
- உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்….. மொராக்கோவை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தல்..
- பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்… தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாகம்..
- நியூசிலாந்து கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்… டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் சவுதி நியமனம்..
- ரஞ்சி கோப்பையின் அறிமுக போட்டியிலேயே சதமடித்த அர்ஜூன் டெண்டுல்கர்….. தந்தையின் சாதனையை மீண்டும் நிகழ்த்தியதாக ரசிகர்கள் புகழாரம்….
இது தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள நியூஸ் 7 தமிழுடன் இணைந்திருங்கள்…













