29.2 C
Chennai
May 15, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் வீரர்களிலேயே இவர் தான் டாப் ! விராட் கோலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

லண்டனில் நடைபெற்ற இந்து இசைக் கச்சேரியில் விராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் கலந்து கொண்ட வீடியோக்கள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர். இன்ஸ்டாகிராமில் 252 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். கோலி சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது மட்டும் அல்லாது அவர் சிறந்த தொழிலதிபரும் கூட. காரணம் கிரிக்கெட்டை தண்டி வருமானம் ஈட்டும் வழிகளை தான் கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போதே உருவாக்கியதால் இன்று அவருடையை மொத்த சொத்து மதிப்பு 1050 கோடி ரூபாயாக உள்ளது. இது தற்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் அதிகபட்சமாக உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எந்தொரு சிறப்பான கிரிக்கெட் வீரராக இருந்தாலும் ஆதிக்கம் நிறைந்த காலம் என்பது 15 முதல் 20 வருடம் மட்டுமே. இதை சரியாக உணர்ந்துக்கொண்ட பல கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டை தாண்டி பல துறையிலே தொழில் தொடங்குவது மட்டும் அல்லாமல் நீண்ட கால வர்த்தகத்தையும் வருமானம் ஈட்டும் வழியையும் உருவாக்கிகொள்கின்றனர்.

அந்த வகையில் 34 வயதான விராட் கோலி செய்யும் பல தொழில்களில் மிக முக்கியமான ஒன்று தான் ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ரெஸ்டாரென்ட் தொழில். இந்த துறையில் அசத்தும் ஒரு பிராண்ட் தான் One8. இது விராட் கோலியின் ஜெர்ஸி நம்பர் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. One8 ரெஸ்டாரென்ட் டெல்லி, கொல்கத்தா, புனே, மும்பை ஆகிய இடங்களில் உள்ளது. இந்த One8 commune எனப்படும் ஹோட்டல் நிறுவனத்தை விராட் கோலி தனது பால்ய நண்பரான வர்த்திக் திஹாரா பொறுப்பில் விட்டது மட்டும் அல்லாமல் தனது நண்பரை பார்ட்னராகவும் மாற்றியுள்ளார்.

மேலும் தனது “A+” டீம் இந்தியா ஒப்பந்தத்தின் மூலம் 7 கோடி சம்பாதிக்கிறார். ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் அவரது போட்டி கட்டணம் ரூ.15 லட்சம் ஆகும். ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம், மேலும், முன்னாள் இந்திய கேப்டன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உடனான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூ.15 கோடி சம்பாதிக்கிறார்.

இந்த மாதம் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி அணியில் வலது கை பேட்டராக இருந்தார். இந்திய அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது அவர் மீண்டும் களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், விராட் கோலியும், அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.  லண்டனில் உள்ள யூனியன் சேப்பலில் நடைபெற்ற அமெரிக்க பாடகர் கிருஷ்ண தாஸின் ‘கீர்த்தனை’ நிகழ்ச்சியை இருவரும் கண்டுகளித்தனர். அவர்கள் இசைக் கச்சரியை பார்வையிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading