100 பேரின் வங்கிக் கணக்கில் ரூ.13 கோடி டெபாசிட்!

சென்னையில் HDFC வங்கியில் 100 பேரின் வங்கி கணக்கில், தலா ரூ.13 கோடி டெபாசிட் செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள HDFC வங்கி கிளையில் இருந்து…

சென்னையில் HDFC வங்கியில் 100 பேரின் வங்கி கணக்கில், தலா ரூ.13 கோடி டெபாசிட் செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள HDFC வங்கி கிளையில் இருந்து வங்கி வாடிக்கையாளர்கள் 100 பேருக்கு தலா 13 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழிற்நுட்பக் கோளாறால் தவறுதலாக இந்த பணப்பரிமாற்றம் நடைபெற்றதா? என வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, பணப் பரிமாற்றம் நடைபெற்ற 100 வங்கிக் கணக்குகளையும் வங்கி அதிகாரிகள் முடக்கி உள்ளனர். 100 பேரின் வங்கி கணக்கில் தலா 13 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வங்கி தரப்பில் இருந்து முறையான புகார் அளிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை HDFC வங்கியில் 100 பேரின் வங்கி கணக்கில், தலா ரூ.13 கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.