பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ.89 லட்சம் பணம்

பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிடிபட்ட 89 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை அம்பத்தூர் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல்…

பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிடிபட்ட 89 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை அம்பத்தூர் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தனிப்படை போலீசார் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அவர் வைத்திருந்த பையில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டு இருந்ததை அறிந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, அவர் புரசைவாக்கத்தைச் சேர்ந்த அபிஷேக் என்றும், அவர் வைத்திருந்தது ஹவாலா பணம் எனவும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த 89 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அதனை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த பணம் யாருடையது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.