ரஜினியுடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி – “தலைவர் 171” படம் குறித்து லோகேஷ் ட்வீட்!

ரஜினியின் 171வது திரைப்படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10-ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. இதில், தென்னிந்திய முன்னணி…

ரஜினியின் 171வது திரைப்படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10-ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. இதில், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது.சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இந்த படம் உலகளவில் ரூ.675 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையில் ‘தலைவர் 170’ படத்தை த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஷ்கரண் தயாரிக்கவுள்ளார். ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.தற்போது ரஜினியின் 171வது படத்திற்கான முக்கிய அறிவிப்பு வெளியானது. அதன்படி, தற்காலிகமாக “தலைவர் 171” என பெயரிடப்பட்ட இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் எனவும், இந்த படத்தையும் ஜெயிலர் படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க உள்ளதாகவும், சண்டைக்காட்சிகள் வடிவமைக்க விக்ரம் படத்தில் பணியாற்றிய அன்பறிவு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளது.

https://twitter.com/Dir_Lokesh/status/1701113267446554985?t=_WV6p6j_DamN8jrMRAlC7w&s=08

இந்நிலையில் ”தலைவர் 171” படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில், ”தலைவர் ரஜினியுடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி..” என பதிவிட்டு அனிரூத், அன்பறிவு மற்றும் சன்பிக்சர்ஸ் எக்ஸ் பக்கத்தை டேக் செய்துள்ளார். ஏற்கனவே லோகேஷின் “லியோ” படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், தற்போது வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களை மேலும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.