#GV700 | அக்.4-ல் வெளியாகிறது அமரனின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

‘அமரன்’ திரைப்படத்தின் ‘ஹே மின்னலே’ பாடல் நாளை மறுநாள் (அக்.4) வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’.…

‘அமரன்’ திரைப்படத்தின் ‘ஹே மின்னலே’ பாடல் நாளை மறுநாள் (அக்.4) வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படம் தீபாவளியன்று வெளியாகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே’ நாளை மறுநாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது ஜிவி பிரகாஷின் 700வது பாடலாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.