பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இன்று இரவு 9 மணி விமானத்தில் டெல்லி செல்லும் ஆளுநர் ரவி, நாளை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்
என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் முற்றும் சூழலில், ஆளுநர் ரவி டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஆளுநர் டெல்லி செல்வதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடியும் வரை மாநில திமுக அரசுக்கு எதிராக கடுமைகாட்ட வேண்டாம் என்று ஆளுநருக்கு மத்திய அரசு அறிவுறுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, நமது இந்திய அரசியலமைப்பு சட்டமானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கு தி.மு.க., கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
-மணிகண்டன்








