முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் வழங்க அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிந்துவிட்டது. எனினும், கொரோனா காரணமாக காப்பீட்டு அட்டையை ஜூன் மாதம் வரை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதில், அறுவை சிகிச்சைக்கு 4 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக ஏழரை லட்சம் ரூபாய் வரை அரசு ஊழியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு யுனைடெட் இந்தியா நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

“பயிர்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது 10 முதல் 15 நாட்களுக்குள் விவசாயிகளிடம் வழங்கப்படும்” – முதல்வர் பழனிசாமி

Jayapriya

கொரோனா 3வது அலை வராது என்று நாம் கூற முடியாது; துணைநிலை ஆளுநர் தமிழிசை

Ezhilarasan

இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!