முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஆளுநர்கள் நடத்த விரும்புவது இணை அல்ல துணை அரசாங்கமே”- ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

ஆளுநர்கள் நடத்த விரும்புவது இணை அரசாங்கம் அல்ல, துணை அரசாங்கமே  என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவை சுகுணா பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தெலுங்கானா துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை, வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு செல்ல தேசிய புதியகல்விக் கொள்கை தேவைப்படுகிறது. புதிய சிந்தனைகளை கொண்டு வரவே தேசிய புதிய கல்விக் கொள்கையை பிரதமர் கொண்டு வந்தார் என்று கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இது இந்தியாவிற்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பாகும். எந்த விதத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு கூடாது என்பது தான் அனைவரது நிலைப்பாடு. ஆளுநர்கள் மக்களை சந்திப்பதால் பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கிறது. தமிழகத்தில் ஆளுநர் ஒரு மதத்ததை சார்ந்து பேசியதாக எனக்கு தெரியவில்லை. பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில் முதல்வர் ஏன் பாராபட்சம் காட்டுகிறார்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் இணை அரசாங்கம் நடத்தவதாக சொல்கிறார்கள். நாங்கள் அரசியல்வாதிகளை போல பிரசாரம் செய்கிறோமா என்ன? இணை என்பதற்கு பதிலாக துணை அரசாங்கம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.  தெலுங்கானாவில் அரசாங்கம் தான் முரண்பாடாக இருக்கிறது. ஆளுநரிடம் முரண்பாடு இல்லை. என்னிடமும் சில மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றது. அவற்றை தாமதப்படுத வேண்டும் என்று இல்லை. சில விபரங்களை கேட்டு இருக்கின்றோம்.

தெலுங்கானாவில் வேலைவாய்ப்பு தொடர்பான மசோதாவில் விபரங்களுக்காக நிறுத்தி வைத்து இருக்கின்றோம். அதில் சில மாற்றங்களுடன் கொண்டு வருகின்றனர். இது மக்களுக்கு பலன் கொடுக்கின்றதா என்பதை பார்த்துவிட்டு கையெழுத்திட வேண்டும். இவற்றை தாமதம் என்று எடுத்துகொள்வதை விட கால அவகாசம் என எடுத்து கொள்ள வேண்டும். இது என்னை வைத்து சொல்கின்றேன் என்று கூறினார்.

அரசியல் காரணத்திற்காக தெலுங்கானாவில் எனக்கு ஆளுநர் உரை மறுக்கப்பட்ட போதும் பட்ஜெட் தாக்கலுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை. மக்கள் நலனை அடிப்படையாக வைத்து நான் இயங்கி வருகின்றேன். ஆனால் என்னை புரிந்து கொள்ளாமல் சிலர் இங்கே விமர்சிக்கின்றனர்.

மக்களை ஆளுநர்கள் சந்திக்கலாம். ஆளுநர்களை சந்திப்பதால் பல பிரச்சினைகள் தீர்ந்து இருக்கின்றது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு அனுமதி கொடுக்காதற்கு அரசியல் காரணமா என்பதை இங்குள்ள ஆளுநரிடம் கேட்டால் அதன் உண்மையான தன்மை தெரியும். இந்த சட்டத்தில் என்ன குறைபாடுகளை பார்த்தார் என்பதை அவரிடம் கேட்டால் தெரியும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குநர் சணல்குமார் கைது

Halley Karthik

குடியரசு தினவிழா கொண்டாட்டம்; சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

Yuthi

தமிழகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar