#GoldRate | மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது…

#GoldRate | The price of gold rose sharply again... What is the price situation today?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கடந்த 3 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. அதன்படி, தங்கம் விலை கடந்த 18ம் தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080க்கும், நேற்று முன்தினம் (டிச.19) சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், நேற்று (டிச.20) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று (டிச.21) அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ7,100-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.