தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து, ரூ.14,040-க்கு, சவரனுக்கு ரூ.680 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் 5-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




