சட்டென சரிந்த தங்கம் விலை – சவரனுக்கு ரூ.800 குறைவு!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.குறுகிய கால…

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.குறுகிய கால இடைவெளியில் கிடுகிடுவென தங்கத்தின் விலை அதிகரித்து சவரன் ரூ.55,000-ஐ தாண்டியது. இந்த தொடர் விலையேற்றம் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து மக்களுக்கு ஆறுதல் அளித்திருந்த நிலையில், நேற்று மீண்டும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து அதிர்ச்சியளித்தது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.53,720-க்கு விற்பனையானது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.6,715-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.87 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : வயநாட்டைத் தொடர்ந்து ரேபரேலியிலும் ராகுல் காந்தி போட்டி – காங். அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்நிலையில், இன்று மீண்டும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.52,920 ஆகவும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,615 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.