எனக்கு கொடுக்கும் பணத்தை உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் கஷ்டப்படும் அறக்கட்டளைக்கு கொடுங்கள் என வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.
இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, கங்கனா ரணாவத் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவிமரியா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும், இப்படம் விநாயகர் சதுர்த்தியை (செப்.15) அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படத்தில் மொத்தம் 10 பாடல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 27 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. ராகவா லாரன்ஸ் படங்களில் அதிக தொகைக்கு கொடுத்து வாங்கப்பட்ட படமாக சந்திரமுகி 2 உருவாகியுள்ளது.
https://twitter.com/offl_Lawrence/status/1696399159354622420?s=20
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அறக்கட்டளை நடத்தி அதன் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தும் வருகிறார். இவர் சமீபத்தில் என் அறக்கட்டளைக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “சிறிது நாட்களுக்கு முன்பு என் அறக்கட்டளைக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன். அதற்கு காரணம் நான் டான்ஸ் மாஸ்டராக இருக்கும் போது அறக்கட்டளை ஆரம்பித்தேன் 60 குழந்தைகளை வீட்டில் வளர்ப்பது, மாற்று திறனாளிகளுக்கு டான்ஸ் சொல்லி கொடுப்பது என்று செய்து வந்தேன். அப்போது என்னால் அதை பண்ண முடியவில்லை அதனால் மற்றவர்களின் உதவிகளை கேட்டிருந்தேன்.







