முட்டை மீது யோகா – 9 வயது சிறுமி உலக சாதனை!

சென்னையில் 9 வயது சிறுமி 30 நிமிடங்கள் முட்டை மீது அமர்ந்து உலக சாதனை படைத்துள்ளார். சென்னை ஒ.எம்.ஆர் சாலை துரைப்பாக்கத்தில் உள்ள அனஹதா யோகா அகடாமியில்,9 வயது மாணவி அனன்யா விஜய் கடந்த…

சென்னையில் 9 வயது சிறுமி 30 நிமிடங்கள் முட்டை மீது அமர்ந்து உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னை ஒ.எம்.ஆர் சாலை துரைப்பாக்கத்தில் உள்ள அனஹதா யோகா அகடாமியில்,
9 வயது மாணவி அனன்யா விஜய் கடந்த சில ஆண்டுகளாக யோகா கற்று வருகிறார்.

இந்த நிலையில் யோகாசனத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பெற்றோர் மற்றும் பயிற்சியாளரின் உறு துணையுடன், கந்தாசனம் என்னும் மிகவும் கடுமையான ஆசனத்தில் இடைவிடாமல் 30 நிமிடங்கள் முட்டையின் மீது அமர்ந்து தனிநபர் உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.

அதனை தொடர்ந்து உலக சாதனை படைத்த மாணவிக்கு நடிகை பூஜா ராமச்சந்திரன்
மற்றும் அனஹதா அகாடமி நிறுவனர் திலீபன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.