அதிமுக பொதுக்குழு மேடையில் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் அவர் திடீரென கோவப்பட்ட சம்பவம் உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏறப்படுத்தியது.
பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமன மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை மேலெழுந்தது. இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என பேச்சு நிலவிவந்தது.
ஆனால் ஏற்கெனவே 23 தீர்மானங்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில் புதிய தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததால் அவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு வந்து சேர்ந்தார். ஓபிஎஸ் வருகையின்போது “ஐயா எடப்பாடியார் வாழ்க, ஒற்றைத் தலைமை வேண்டும்” என எடப்பாடி ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். இது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பொதுக்குழுவில் அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக உள்ள தமிழ்மண் உசேனை நிரந்தர அவைத்தலைவராக்குவது குறித்த தீர்மானம் நிவேற்றப்பட்ட நிலையில், இதை முன்மொழிய ஓபிஎஸ்-ம், வழிமொழிய இபிஎஸ்-ம் அழைக்கப்பட்டனர். இதனையேற்று ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.
பரபரப்பான இந்த சூழலில் எடப்பாடிக்கு திடீரென மாலை அணிவிக்கப்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத் இபிஎஸ் அதை ஒதுக்கி தள்ளிய கொஞ்ச நேரம் இருங்கப்பா என கடுப்பாகினார். மேலும் அவருக்கு கொடுக்கப்பட்ட பூங்கொத்தை புறந்தள்ளிவிட்டார். இந்த சம்பவம் பொதுக்குழுவில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து அரங்கில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து, ஏய் உட்காருங்கயா என தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்.








