கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஏற்பட்ட காட்டு தீயால் ஏராளமான அரியவகை மரங்கள் சேதமாகின.
மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியான முகளியடிமலை மற்றும் வேளிமலை பகுதிகளில் நள்ளிரவில் திடீரென காட்டு தீ ஏற்பட்டது. விடிய விடிய எரிந்து வரும் காட்டுத் தீயால் அங்கிருந்த ஏராளமான அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் தீக்கிரையாகின. சம்பவ இடத்திற்கு வந்த வேளிமலை, குலசேகரம் சரக வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தீ தடுப்பு சுவர்களை வனத்துறையினர் முறையாக அமைக்காதால் காட்டு தீ பரவி வருவதாக மலைவாழ்மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.







