தகுதிநீக்கம் செய்யப்பட்டபோது ஒட்டுமொத்த வயநாடு தொகுதி மக்களும் எனக்கு துணையாக இருந்தனர். வயநாடு தொகுதிக்கு மீண்டும் வந்ததை மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் இன்று டாக்டர் அம்பேத்கர் நினைவு புற்றுநோய் மையத்தை திறந்து வைத்த ராகுல் காந்தி பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது ராகுல்காந்தி பேசியதாவது:
வயநாடு தொகுதிக்கு மீண்டும் வந்ததை மகிழ்ச்சியாக உணர்கிறேன். தகுதிநீக்கம் செய்யப்பட்டபோது ஒட்டுமொத்த வயநாடு தொகுதி மக்களும் எனக்கு துணையாக இருந்தனர். கடினமான காலத்திலும் நீங்கள் எனக்குத் துணையாக இருந்தீர்கள்.
ஆதிவாசி மாணவ மாணவிகளின் மேற்படிப்பு க்கு போதிய நடவடிக்கை எடுக்கப்படும், இது போன்று வன பகுதியில் வீடு கட்டவும் உரிமை பெற்று தரவும் நடவடிக்கை எடுப்பதே எனது குறிக்கோள். ஆதிவாசி தற்போது வன வாசிகள் என அழைக்க துவங்கி உள்ளனர். நாங்கள் ஆதிவாசி என அழைக்கிறோம் ஆனால் மற்றும் சிலர் வன வாசி என அழைக்கின்றனர். ஆதி வாசிகளை வன வாசி என அழைக்கப்படுவதின் பின் துரத்திருஷ்டவசமானது.
வன வாசி என்பது இந்திய வனத்தின் உரிமையாளர்கள் என அர்த்தம். அப்போது வன வாசி என்பவர்கள் வனத்தில் மட்டுமே வாழ வேண்டும் ,வெளியே செல்ல கூடாது என்பதே இதன் மறைமுக அஜந்தாவாக உள்ளது. நாங்கள் இதை அங்கீகரிக்க மாட்டோம். இது உங்கள் சரித்திரத்தை மாற்றும் நிகழ்வாக உள்ளன. உங்களுக்கு ம் இந்த நாட்டிற்கும் உள்ள தொடர்பை துண்டிக்கும் செயலாக உள்ளன.