மருத்துவமனையிலிருந்து நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகிறார் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா!

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா மருத்துவமனையிலிருந்து நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.  சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம், துளு…

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா மருத்துவமனையிலிருந்து நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம், துளு மற்றும் படகா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் திருப்பதியில் பிரபல பின்னணி பாடகி சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயது மூப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது. இதையடுதது மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, சுசீலாவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாடகி பி.சுசீலா சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார் எனக் கூறப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.