முக்கியச் செய்திகள் உலகம்

பழைய ஸ்கூல் பஸ்சை நடமாடும் வீடாக்கிய குடும்பம்!

பழைய ஸ்கூல் பஸ்-சை வாங்கி நடமாடும் வீடாக்கியுள்ள குடும்பம் ஒன்று அந்தப் பேருந்தில் சுற்றி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

மனித வாழ்க்கையை மொத்தமாக தடம் மாற்றி இருக்கிறது கொரோனா. இந்த உயிர் கொல்லி தொற்று காரணமாக, பலர் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி இருக்கிறார்கள். சிலர் கட்டாயத்தால் மாற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அமெரிக் காவைச் சேர்ந்த எலிசபெத்தும் அவர் பார்ட்னர் ஸ்பைக்கும் அவர்கள் குழந்தைகளும் அப்படித்தான், தங்கள் வாழ்க்கையை சுகமாக மாற்றியிருக்கிறார்கள்.

வீட்டிலிருந்தே வேலை, ஆன்லைன் பாடம் என கொரோனா உலகை மாற்றியிருப்பதால், ஸ்பைக்கும் எலிசபெத்தும் ஒரு ஐடியா செய்தார்கள். அதாவது நடமாடும் வீட்டை உருவாக் க முடிவு செய்தார்கள்.

அதற்காக பழைய ஸ்கூல் பஸ் ஒன்றை விலைக்கு வாங்கினார் கள். அதன் உள்ளமைப்பை, குளியலறை, மூன்று பெட்ரூம், சிறிய சமையல் அறை என மாற்றினார்கள். மேலே, மின் சாரப் பயன்பாட்டிற்கு சோலார் பேனல்களையும் பொருத்தினார்கள். நடமாடும் வீடு ரெடி. இதற்காக அவர்கள் 2 மாதங்கள் செலவழித்தார்கள்.

இதுபற்றி எலிசபெத் கூறும்போது, இப்போது 16 மாநிலங்களுக்கு இந்த பஸ் மூலம் பயணம் செய்திருக்கிறோம். இந்த அட்வெஞ்சர் புதுவித அனுபவத்தை தருகிறது’ என்று கூறியுள் ளார் அவர் ஜாலியாக.

Advertisement:
SHARE

Related posts

ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் சூர்யா, கார்த்தி

Halley karthi

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை தலைமையேற்று நடத்துகிறார் பிரதமர் மோடி

Halley karthi

பேராசிரியை கொலை வழக்கில் அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

Jeba Arul Robinson