மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவைக்கு தடை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் 4 மாதங்களுக்கு மேலாக மெய்தி – குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்தநிலையில் 2 மாணவர்கள் மர்மநபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மோதல் வெடித்தன.
இதையடுத்து மாநிலம் முழுவதும் இணைய சேவையை 5 நாட்களுக்கு மணிப்பூர் அரசு நிறுத்தி வைத்தது. விதிக்கப்பட்ட தடை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மேலும் 5 நாட்களுக்கு தடையை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.







