இனி சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம்; அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் இனி சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.   தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு…

தமிழ்நாட்டில் இனி சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 800க்கும் கீழ் பதிவாகி வருகிறது. இதனிடையே மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிறு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. நேற்று வரை 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்று நடைபெற்ற 12வது மெகா தடுப்பூசி முகாமில் 16லட்சத்து 5ஆயிரத்து 293 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறினார்.

தமிழ்நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 7 கோடியே 7 லட்சத்து 48 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக கூறிய அவர், தடுப்பூசி செலுத்தியவர்களில் 5 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், தீவிர பாதிப்பு ஏற்படவில்லை எனக்கூறினார். மருத்துவப் பணியாளர்களின் நலன் கருதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.