நீரஜ் சோப்ராவிடம் #PhoneNumber கேட்ட ரசிகை… வைரலாகும் வீடியோ!

நீரஜ் சோப்ராவிடம் ரசிகை ஒருவர் போன் நம்பர் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்களைக் குவித்துள்ளார். இந்நிலையில் ரசிகை…

European Fan Asks Neeraj Chopra For #PhoneNumber...Video Goes Viral!

நீரஜ் சோப்ராவிடம் ரசிகை ஒருவர் போன் நம்பர் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்களைக் குவித்துள்ளார். இந்நிலையில் ரசிகை ஒருவர் நீரஜ் சோப்ராவிடம் போன் நம்பர் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டு முறை பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார். அப்போது இரண்டு பெண் ரசிகைகள் அவரிடம் செல்ஃபி கேட்டனர். அவர்கள் இருவருக்கும் நீரஜ் போஸ் கொடுத்தார். அதில் இரண்டாவது பெண் உங்களது எண் கிடைக்குமா? எனக் கேட்டார். அப்பெண்ணின் கோரிக்கையை முகம் சுழிக்காமல் நீரஜ் மறுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், நூற்றுக்கணக்கான கருத்துகளையும் பெற்றுள்ளது.

பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில், டைமண்ட் லீக்  தடகளத்தின் பைனலுக்கு பின் எடுக்கப்பட்ட வீடியோ எனக் கூறப்படுகிறது. ஆனால் அது எந்த இடம் என்பது தெளிவாக இல்லை. பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் காயத்துடன் பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.