அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜன.22) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, திமுக அரசு இன்றுவரை வழங்கவில்லை. புத்தாண்டு பிறந்த ஜனவரி மாதத்தில், பல மாவட்டங்களில் இதுவரை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை என்றும் செய்திகள் வருகின்றன” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார்.
ஒன்றிய பாஜக அரசிற்கு ஒரு பாதிப்பென்றால் ஓடிவந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய்வதே எதிர்கட்சித்தலைவர் திரு. பழனிசாமி அவர்களின் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார்.
100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக ஒதுக்க… pic.twitter.com/t1cPfUpyOn
— Thangam Thenarasu (@TThenarasu) January 22, 2025







