மழை பாதிப்பை சரிசெய்ய எண்ணூர் மக்கள் கூறும் தீர்வு

சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்துநகர் பகுதியில் மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் மழை நின்ற பின்னரும் கூட வடியாமல்…

சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்துநகர் பகுதியில் மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் மழை நின்ற பின்னரும் கூட வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தண்ணீர் தேங்காமல் இருக்க தீர்வு என்ன?” என நியூஸ் 7 தமிழில் இன்று தொடர் நேரலையை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறது.

இதன் ஒரு பகுதியாக எண்ணூர் சத்தியவாணி முத்து நகர்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “கடந்த 35 ஆண்டுகாலமாக இப்பகுதியில் மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. மட்டுமல்லாது மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. சுற்றுவட்டாரப்பகுதியில் எங்கும் மருத்துவமனை கிடையாது.

தற்போதைய கனமழையால் 100 வீடுகளுக்கும் மேலாக நீர் சூழ்ந்துள்ளது. மழை நீர் வெளியேற முறையாக கழிவு நீ்ர் வடிகால் கட்டமைப்பை சீர்படுத்த வேண்டும். குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அவலத்தை தடுக்க வேண்டும். மின் இணைப்பை சீர்படுத்த வேண்டும். அதேபோல துப்புறவு பணிகள் சரியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.” என பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.