வேடசந்தூரில் திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த மே 27-ம் தேதி…

திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த மே 27-ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 5 இடங்கள் சீல்  வைக்கப்பட்டன. இதனைத்தொர்ந்து ஜூன் 13-ம் தேதி கரூரில் 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.  அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் ஆகியோர் அலுவலகமாக பயன்படுத்தி வந்த ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள கட்டட த்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சென்னை மற்றும் கரூரில்  அமைச்சர் செந்தில் பாலாஜி  தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை  தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. பின்னர் அவரை அமலாக்கத்துறை கைது செய்தனர். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  அவரது தோட்டத்து பங்களாவிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சாமிநாதன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.