சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்.
வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் கடந்த 9 நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
இரு நாடுகளிலும் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்றார். பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அப்போது கையெழுத்தாகின. இந்த நிலையில் தமது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு இன்றிரவு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.







