எலான் மஸ்க் ட்வீட்டரின் பறவை லோகோவுக்கு பதிலாக வேறு லோகவை மாற்றவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அடிக்கடி ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் 1 நாளைக்கு பயனர்கள் குறிப்பிட்ட பதிவுகள் மட்டும் தான் பார்க்கமுடியும் என ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ட்விட்டர் லோகோவை மாற்ற உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாய் (Doge) படத்தை லோகோவாக மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “டிவிட்டர் தளத்தின் நிறத்தை கருப்பாக மாற்ற வேண்டும்” என கருத்துக்கணிப்பு ஒன்றை தொடங்கியுள்ளார். மற்றொரு பதிவில், ”விரைவில் டிவிட்டரின் பிராண்டை மாற்ற உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து அனைத்து பறவைகளும் விடுவிக்கப்படும்” எனவும் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ் லோகோ இன்று இரவு வெளியானால், நாளை அது உலகம் முழுவதும் உள்ள டிவிட்டர் பயானாளிகளுக்கு செயல்பாட்டிற்கு வரும் எனவும் மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார். அதோடு, டிவிட்டரின் புதிய லோகாவான ”எக்ஸ்” தொடர்பான சிறிய வீடியோவயும் வெளியிட்டுள்ளார்.
— Elon Musk (@elonmusk) July 23, 2023