திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட்டுகளுக்கு ஆன்லைன் லிங்க் மூலம் பணம் செலுத்தும் வசதி சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலில் அலைமோதும் கூட்டத்தை கட்டுப்படுத்த கோயில் தேவஸ்தானம் அவ்வப்போது பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தரிசன டிக்கெட்டுகளை வழங்கும் முறையிலும் அவ்வப்போது சில நவீன முறைகளை புகுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தற்போது ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்களுக்கு ஆன்லைன் லிங்க் மூலம் பணம் செலுத்தும் வசதி சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கட்டண சேவை டிக்கெட்களுக்கான கட்டணத்தை ஆன்லைன் லிங்க் மூலம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறும் வசதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சோதனை அடிப்படையில் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.







