#Electionbondissue | “நிர்மலா சீதாராமன் பதவி விலகினால், நானும் பதவியில் இருந்து விலகத் தயார்!” – முதலமைச்சர் சித்தராமையா!

தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு கடந்த 20218ஆம் ஆண்டு…

தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு கடந்த 20218ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனா உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகவும் உள்ளது எனவும் தெரிவித்தது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறி இருந்தார்.

பெங்களூருவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் என்பவர் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்ய பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனவே நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும், பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகினால், நானும் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார்” என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.